தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்: 824 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப 824 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த டிசம்பர் 2023 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் கீழ் கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கு 675 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை பகுதிக்கு 65 நபர்களும், கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கு 29 நபர்களும், வனத்துறையின் கீழ் வன தொழில் பழகுனர் பதவிக்கு 10 நபர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


பல்வேறு துறைகளில் தொகுதி ஐந்தில் அடங்கிய இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு 45 நபர்களும் என மொத்தம் 824 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 



Comments

Popular posts from this blog