பள்ளிக்கல்வித்துறையில் 13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள். தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!!!
தமிழகத்தில் அனைத்து துறை சார்ந்த காலி பணியிடங்களும் போட்டி தேர்வு மூலமாக நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு வருடத்தில் தொடக்கத்திலும் போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் டிஎன்பிஎஸ்சி வருடாந்திர கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது.
இதில் ஒவ்வொரு துறை சார்ந்த தேர்வுகள் மற்றும் காலி பணியிடங்கள் என அனைத்து அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணிநீயமான தேர்வு குறித்த உத்தேச வருடாந்திர கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது வரை கால அட்டவணை வெளியாகாமல் உள்ளது.
தமிழகத்தில் தற்போது பள்ளி கல்வித்துறையில் சுமார் 13,000 ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இதனை நிரப்புவதற்கான தகுதி தேர்வுக்கு தேர்வர்கள் முன்கூட்டியே தயாராக ஏதுவாக இதனை விரைந்து வெளியிட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment