4-ம் தேதி 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: எக்ஸாம் ஹால் போகும் போது இதை எல்லாம் மறக்காதீங்க!




தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதேபோல வட்டார வள மைய ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வினை நடத்த அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். 2,222 ஆசிரியர் பணியிடங்களுக்கு 41,485 விண்ணப்பித்து இருந்தனர். ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஹால் டிக்கெட் இணையதளம் மூலம் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வர்கள் பதிவிறக்கம் செய்தனர்.


ஆனால் டிசம்பர் மாத இறுதியில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வர்கள் மேலும் படிப்பதற்கு அவகாசம் கிடைத்தது. அவர்களில் பலர் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு கடந்த சில மாதங்களாக சென்று ஆயத்தமாகி வருகின்றனர்.


தேர்வுக்கு இன்னும் 3 நாட்கள் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் முழு வீச்சில் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் 130 மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 41,485 பேர் எழுதுகிறார்கள். காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.


தேர்வறைக்குச் செல்லும் போது உங்கள் அனுமதி அட்டை என்ற ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

Comments

Popular posts from this blog