ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுக்கு குறைந்தது ஆர்வம் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவியில், 2,582 காலியிடத்துக்கு, 41,000 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஒரு காலியிடத்துக்கு, 16 பேர் மட்டுமே போட்டியிடும் நிலை உள்ளது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 2,582 காலியிடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அடுத்த மாதம், 7ம் தேதி நடக்க உள்ளது.எண்ணிக்கை குறைவுபட்டப்படிப்புடன் பி.எட்., தேர்ச்சி பெற்று, ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம், 41,478 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு காலியிடத்துக்கு, 16 பேர் போட்டி போடும் நிலை உள்ளது. ஏற்கனவே, 5,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, 1.5 லட்சம் பேர் வரை விண்ணப்பித்த...
Posts
Showing posts from December 25, 2023