குருப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்! குரூப் 2 தேர்வு முடிந்து 10 மாதங்களாகியும் முடிவுகள் வெளியாகாமல் இருந்த நிலையில், முதன்மைத் தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியாகும் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குருப் 2 பணியிடங்கள் 121, குருப் 2ஏ பணியிடங்கள் 5,097 ஆகியவற்றை நிரப்புவதற்கான அறிவுப்பு, 2022 பிப்ரவரி 23ஆம் நாள் வெளியிடப்பட்டது. அப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் முடிந்து, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வை 52 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்டமாக நடைபெறும் முதன்மைத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு முடிந்து 10 மாதங்களாகியும் இதன் முடிவு வெளிவராததால், தேர்வு எழுதிய பட்டதாரிகள் எப்போது முடிவுகள் வரும் என காத்திருக்கின்றனர். தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டால், அரசுப் பதவிகளில் சேர முடியும் என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இ...
Posts
Showing posts from December 15, 2023
- Get link
- X
- Other Apps
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: ஜன., 11 வரை விண்ணப்பிக்கலாம்! அரசு தொழில்நுட்ப கல்வி துறை சார்பில், 2024 பிப்., மாதம் நடைபெறவுள்ள வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், 14-12-2023 முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், நேற்று முதல், 11-01-2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜன., 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை, வாய்ப்பு அளிக்கப்படும்.விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப கட்டணம் 30 ரூபாய், இளநிலை 100 ரூபாய், இடைநிலை 120 ரூபாய், முதுநிலை 130 ரூபாய், உயர்வேகம் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களை, www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.