போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு... 2,50,000 பேர் பங்கேற்பு! காவலர் தேர்வுக்கான எழுத்து தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்தும் திருநங்கைகள் உட்பட 2,50,000 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான 2-ம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான 2-ம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 3,359 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிட்டது. இதில், 783 பெண்களும், 2,576 இளைஞர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்த பணியிடங்களில் 2,599 காலி பணி இடங்கள் காவல்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 780 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைத் துறையில் மொத்தம் 86 காலி பணியிடங்களும், தீயணைப்புத்துறைக்கு 674 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன....
Posts
Showing posts from December 11, 2023
- Get link
- X
- Other Apps
விழுப்புரம் மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதியோர் 9,398 பேர்; 1411 பேர் ஆப்சென்ட்; மையத்தில் ஐ.ஜி., ஆய்வு விழுப்புரம் மாவட்டத்தில், 7 மையங்களில் நடந்த காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 9,398 பேர் தேர்வு எழுதினர். வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.தமிழகத்தில் சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) மற்றும் சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு நேற்று நடந்தது. காலியாக உள்ள ஆயுதப்படை காவலர்கள் 2,599, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் 86, சிறைக் காவலர்கள் 674 இடங்கள் என, மொத்தம் 3,359 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுதும் நேற்று நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில், எஸ்.பி., சசாங்சாய் தலைமையிலான தேர்வுக் குழுவினர் தேர்வு பணிகளுக்கு ஏற்பாடு செய்தனர். ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஸ்ரீதர், தேவராஜ் மற்றும் 6 டி.எஸ்.பி.,க்கள் முதல் காவலர்கள் வரை 1,150 பேர் பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில், விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு மகளிர் மேல்ந...