Posts

Showing posts from December 10, 2023
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான புதிய தகவல் குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், எஞ்சிய பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் வெளியாகக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 5, 446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இதனை 55 ஆயிரத்து 41 பேர் எழுதிய நிலையில், 10 மாதங்கள் கடந்தும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதுகுறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டிசம்பர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். தற்போது டிசம்பர் முதல் வாரம் முடிவடைந்த நிலையில், முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. ...
Image
  அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியானது..! மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளிகளை தூய்மைப்படுத்த 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 6 முதல் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி டிசம்பர் 22-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.  அதன்படி 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் நண்பகல் 12. 30 வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. 6 முதல் 8 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு காலை 10 மணி முதல் நண்பர்கள் 12. 30 மணி வரை நடைபெறுகிறது. 9 முதல் 10 மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு காலை 9 மணி மு...