
10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகிவிட்டது. தேர்வுக்கும் 90 நாட்களே உள்ளன. ( 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1, 2024ல் துவக்கம். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4, 2024ல் துவக்கம். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26, 2024ல் துவக்கம்.) தேர்வுக்கு தயாராக இன்னும் 3 மாதங்களுக்கும் குறைவாகவே அவகாசம் உள்ளது. தேர்வுக்கு தயாராகும் முன்பு முதலில் பாடத்திட்டத்தை கையில் வைத்துக் கொள்வது நல்லது. இதன்மூலம் எதைப் படிக்க வேண்டும் என்ற வரம்பு நமக்கு தெரியவரும். தேர்வுக்கு முன்பாக எத்தனை நாட்கள் அவகாசம் உள்ளது என்பதை கணக்கிட்டு அதை ஒவ்வொரு பாடத்திற்கும் இத்தனை நாட்கள் என ஒதுக்கி அட்டவணை தயாரிப்பது அவசியம். அந்த அட்டவணைப்படி ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடிக்க வேண்டும். கடந்த ஆண்டு கேள்வித்தாள்களை படிக்க சில தினங்களை ஒதுக்கலாம். அந்த அட்டவணையில் பாடங்கள் குறிப்பிடாமல் சில நாட்களை ஒதுக்கி வைப்பது அவசியம். தவிர்க்க முடியாத காரணங்களால் சில நாட்களில் திட்டமி...