
வினா-வங்கி புத்தகம் ஜனவரியில் வழங்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா-வங்கி புத்தகங்கள் மீண்டும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கிவரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுநர்கள் நியமனம் என்பது உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுவதற்கு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக நம்மிடம் ஒரே ஒரு சட்ட அலுவலர் மட்டுமே உள்ளார்.அவருக்கு உதவியாக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளன...