
டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி திடீர் மாற்றம்: தலைமை செயலர் அதிரடி உத்தரவு! தலைவர் பதவியும் காலி 2 ஆண்டுகளுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, வணிகவரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்து வந்தார் உமாமகேஸ்வரி. இந்நிலையில், திடீரென அவர் மாற்றப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய செயலாளர் உமாமகேஸ்வரி, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சார்ந்த பல்வேறு முக்கிய பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக டிஎன்பிஎஸ்சி செயலாளராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. விரைவில் நியமன அறிவிப்பு வரக்கூடும் எனத் தெரிகிறது. டிஎன்பிஎஸ்சியின் பல்வேறு விதமான குர...