Posts

Showing posts from November 27, 2023
Image
  TN TRB Recruitment: 2,582 பட்டதாரி ஆசிரியர், பயிற்றுநர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்த டிஆர்பி! பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிறகு 2222 பணியிடங்களுடன் 360 இடங்கள் சேர்த்து 2582 பணியிடங்களுக்காக தேர்வு அறிவிக்கப்பட்டது. ஒரு வாரத்துக்கு அவகாசம் நீட்டிப்பு இதற்காக ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. எனினும் தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்வர்கள் டிசம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். இதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் தங்களது இ...