நீட் தேர்வு 2024 - பாடத்திட்டம் குறைப்பு: என்டிஏ அறிவிப்பு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) அடிப்படையில் நடத்தப்படுகிறது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, கரோனா பரவல் காலத்தில் பள்ளி பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ வாரியம் கணிசமாக குறைத்தது. அதன்பிறகு இயல்பு நிலை திரும்பினாலும், குறைக்கப்பட்ட பாடத்திட்டமே தற்போதும் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. ஆனால், நீட் தேர்வுக்கு மட்டும் முழு பாடத்திட்டமும் கணக்கில் கொள்ளப்படுகிறது. இதனால், பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வைவிட, கூடுதல் பாடங்களை நீட் தேர்வுக்கு படிக்க வேண்டிய நிலை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) குறைத்துள்ளது. அதன் விவரங்களை என்டிஏ நேற்று முன்தி...
Posts
Showing posts from November 24, 2023
- Get link
- X
- Other Apps
+ 2 - ல் பயாலஜி படிக்காதவர்களும் நீட் எழுத முடியும் - புதிய விதிமுறைகள் அறிவிப்பு நீட் தேர்வு; விதிகளில் தளர்வுகளை அறிவித்த தேசிய மருத்துவ ஆணையம்; உயிரியல் படிக்காதவர்களும் நீட் தேர்வு எழுத வாய்ப்பு ஆங்கிலத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கூடுதல் பாடமாகப் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களையும் நீட் தேர்வில் பங்கேற்க தேசிய மருத்துவ ஆணையம் (NMC) புதன்கிழமை அனுமதித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட அறிவிப்பில், இந்த முடிவு "முன்னர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மாணவர்களுக்கும் பொருந்தும்" என்றும் கூறப்பட்டுள்ளது. முந்தைய இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ) 1997 ஆம் ஆண்டு பட்டதாரி மருத்துவக் கல்விக்கான விதிமுறைகள், அத்தியாயம்-II இன் கீழ் பல்வேறு திருத்தங்கள் உட்பட எம்.பி.பி.எஸ் (MBBS) படிப்புகளுக்கான சேர்க்கை மற்றும் தேர்வை ஒழுங்குபடுத்தியது. அப்போது, இளங்கலை பட்டதாரிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆங்கிலத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை செய...