
அரசாணை 149ஐ நீக்குக: நவ.23-ல் உண்ணாவிரதம் - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கம் அறிவிப்பு அரசாணை 149ஐ நீக்கக்கோரியும் போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் நவம்பர் 23-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கம் கூறி உள்ளதாவது: 2013-ஆம் ஆண்டில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசாணை எண்.252 மற்றும் 71 என்ற வெயிட்டேஜ் முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, சுமார் 24 ஆயிரம் ஆசிரியர்கள் பணி வாய்ப்பு பெற்றனர். அதிமுக ஆட்சியில் போட்டி தேர்வு ஆனால் வெயிட்டேஜ் முறை தவறான முறை என்று அரசாங்கம் நீக்கம் செய்தது. அந்த அரசாணைகளால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவழங்காமல் மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசாணை எண் 149 என்கிற மறுநியமனப் போட்டி தேர்வு, 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த அராசாணையை தற்போதைய முதல்வர், அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மிகவும் கடுமையாக எதிர்த்தார். அது மட்டுமல்லாம...