Posts

Showing posts from November 13, 2023
Image
  விரைவில் குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு விரைவில் TNPSC குரூப் 4 2023 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் குரூப் 4 தேர்வு நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில், கூடிய விரைவில் TNPSC குரூப் 4 2023 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் குரூப் 4 தேர்வு நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.   மேலும் குரூப் 4 தேர்வுக்கான அனைத்து அறிவிப்புகளையும் https://www.tnpsc.gov.in/ என்கிற இணையதள பக்கத்தின் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். இதையடுத்து அதே நேரத்தில், இம்மாதத்திலேயே குரூப் 4 தேர்விற்கான விண்ணப்ப பதிவு துவங்கப்படலாம் என்பதால் தேர்வாளர்கள் சரியான நேரத்தில் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.
Image
  NEET UG 2024: நீட் தேர்வில் வெற்றி பெற மாதிரி தேர்வுகளை முயற்சிப்பது அவசியம்; ஏன்? தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) 2024 நெருங்கி வருவதால், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் தீவிர தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற நேர மேலாண்மை அவசியம் தேவைப்படும் போட்டித் தேர்வுகள் உங்கள் அறிவு மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை மதிப்பிடுவதோடு மட்டுமல்லாமல், தீவிர அழுத்தத்தின் கீழ் உங்களின் திறமையையும் சிறந்ததை வழங்குவதற்கான திறனையும் ஆராயும். எனவே, மாதிரித் தேர்வுத் தாள்களின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. இந்தக் கட்டுரையில், உங்கள் NEET 2024 தயாரிப்பை வலுப்படுத்த, மாதிரித் தேர்வுத் தாள்களைத் திறம்படத் தீர்ப்பதற்கான குறிப்பிட்ட உத்தியைப் பற்றி ஆராய்வோம். ஆனால், அதற்கு முன், மாதிரித் தேர்வுத் தாள்களைத் தீர்ப்பது ஏன் நீட் தேர்வில் வெற்றி பெற முக்கியம் என்று பார்ப்போம். தேர்வு முறை பற்றிய பரிச்சயம்: மாதிரித் தேர்வுத் தாள்கள் உண்மையான தேர்வு முறையைப் பிரதிபலிக்கின்றன, உண்மையான தேர்வு நாளில் நீங்கள் சந்திக்கும் கேள்வி தாள் வடிவம், கேள்வி வகைகள் மற்றும் நேரக் கட்டுப்ப...
Image
  ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்.! TNPSC முக்கிய அறிவிப்பு.! அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு நவம்பர் 19-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் ஓட்டுனர், நடத்துனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தமிழகம் முழுவதும் 10 மையங்களில், வரும் நவம்பர் 19-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டை இன்று முதல் www.tnstc.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தேர்வுக்கான அனுமதிச் சீட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தபாலில் அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.