
தமிழக கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க! தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களில் தற்போது 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடங்களின் விவரம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை -2257 அரியலூர் - 28 செங்கல்பட்டு - 73 கோவை – 110 சென்னை – 132 திண்டுக்கல் – 67 ஈரோடு – 73 காஞ்சிபுரம் – 43 கள்ளக்குறிச்சி – 35 கன்னியாகுமரி – 35 கரூர் – 37 கிருஷ்ணகிரி – 58 மயிலாடுதுறை – 26 நாகப்பட்டினம் – 8 நீலகிரி – 88 ராமநாதபுரம் - 112 சேலம் – 140 சிவகங்கை – 28 தி...