TNPSC - கணக்கு அதிகாரி பணிக்கு தேர்வு அறிவிப்பு அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பதவியில், 52 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறையில், கணக்கு அதிகாரி நிலை - 3ல், 7; மருத்துவ சேவை கழகத்தின் கணக்கு அதிகாரி பதவியில், 1; தமிழக தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் பதவியில், நான்கு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.தொழில் முதலீட்டு கழகத்தில் நிதி பிரிவு அதிகாரி, 27; தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவன் மேலாளர் பதவியில், 13 என, மொத்தம், 52 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி தேர்வு, பிப்., 5, 6ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வுக்கு விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; அடுத்த மாதம், 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Posts
Showing posts from November 11, 2023
- Get link
- X
- Other Apps
வட்டாரக் கல்வி அலுவலா் தேர்வு: மதிப்பெண் வெளியீடு வட்டாரக் கல்வி அலுவலா் போட்டித் தேர்வுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியா் தேர்வு வாரியத்தின் சாா்பில் 33 வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த செப்.10-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 35,403 தேர்வா்கள் பங்கேற்றனா். இந்தத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் விவரம் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது என ஆசிரியா் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
- Get link
- X
- Other Apps
பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசபயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய 2023ம் ஆண்டுத் திட்ட படி, பட்டதாரி ஆசிரியர் 2222 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30ம் தேதி ஆகும். மேற்படி தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக 27ம் தேதி அன்று தொடங்கப்படவுள்ளது. இப்போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொண்டு பயில்வதற்கு தங்களது சுய விவரத்தினை https://forms.gle/gsZtU6Quse6iG71XA என்ற லிங்க் மூலமாக முன்பதிவு செய்யலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற