
2013 குரூப்-2 தேர்வில் ஜெய்ஹிந்த் என எழுதிய விடைத்தாளை திருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு மதுரை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2013-ல் நடத்திய குரூப்-2 தேர்வில் ‘ஜெய் ஹிந்த்’ எனக் குறிப்பிடப் பட்டதால், செல்லாது என அறிவிக் கப்பட்ட விடைத்தாளை திருத்தி மதிப்பெண் வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்பனா என்பவர், உயர் நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் குரூப்-2 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2013-ல் நடந்தது. பி.சி. மகளிர் தமிழ்வழிக் கல்வி பிரிவில் விண்ணப்பித்தேன். அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று 31.8.2015-ல் நடந்த கலந்தாய்விலும் பங்கேற்றேன். 184 மதிப்பெண் பெற்றதால், என்னை தேர்வு செய்யவில்லை. பிரதான தேர்வின் பகுதி 2 விடைத்தாளை செல்லாது என அறிவித்துள்ளனர். இதனால் எனக்கு வாய்ப்பு பறிபோயுள்ளது. எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து, பணி வழங்குமாறு உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார். டிஎன்பிஎஸ்சி தரப்பில், பகுதி 2-ல் இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்து...