Posts

Showing posts from November 7, 2023
Image
  ஜேஇஇ முதன்மைத் தேர்வு: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்! ஐஐடி என்ஐடி போன்ற மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.  அந்த வகையில் ஜேஇஇ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், பிறகு மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்தேர்வு எழுத முடியும். ஜேஇஇ மெயின் தேர்வு வரும் ஜனவரி-பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு (JEE Main, Session 1, exam) ஜனவரி 24 முதல் பிப்.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  விருப்பமுள்ள மாணவர்கள் இந்த முதல் அமர்வுக்கு https://jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  இதன் முடிவுகள் பிப்.12-ம் தேதி வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறியலாம். 011-40759000 / 69227700 என்ற எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. JEE முதன்மை தேர
Image
  TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? 80% பணிகள் நிறைவு: அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் கடந்த பிப்ரவரி 25 -ம் தேதி நடந்த டிஎன்பிஎஸ்சி, குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி 2 மற்றும் தொகுதி 2அ முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகளை வெளியிட காலதாமதம் ஆகிறது என்ற செய்தித்தாளிகளின் கருத்துக்களை மறுப்பதாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2 மற்றும் 2அ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும் 25.2.2023 அன்று தேர்வு நடைபெற்றது. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை 51,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுதி உள்ளனர். இது இந்திய அரசின் குடிமைப்பணித் தேர்வாணையம் நடத்தும் முதன்மை எழுத்து தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்க
Image
 பி.எட்., தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் நியமனத்தில் வாய்ப்பு மறுப்பு பி.இ., பட்டதாரிகள் போர்க்கொடி தமிழகத்தில் 2222 பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பில் பி.எட்., ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற பி.இ., பட்டதாரிகள் விண்ணப்பிக்க வாய்ப்பில்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் என 2222 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.ஆர்.பி., அக்டோபரில் வெளியிட்டது. டி.இ.டி., தாள் 2 தேர்ச்சி பெற்றோர் இத்தேர்வில் பங்கேற்க தகுதியானவர்கள். இதற்காக நவ., 1 முதன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது துவங்கியுள்ளது. நவ.,30 விண்ணப்பிக்க கடைசி தேதி. எழுத்து தேர்வு 2024, ஜன., 7 ல் நடக்கிறது.இத்தேர்வுக்கு பி.இ., முடித்து பி.எட்., டி.இ.டி., தாள் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு விண்ணப்பிக்கும் வசதி இல்லை. தமிழக அரசு பொறியியல் பட்டதாரிகள் பி.எட்., படிக்கவும், அவர்கள் டி.இ.டி., தேர்ச்சி பெற்றால் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித ஆசிரியராக நியமிக்கப்படலாம் என 2018ல் உத்தரவிட்டது.  இதன் அடிப்படையில் பி.இ., முடித்த பலர் பி.எட்.,