Posts

Showing posts from November 5, 2023
Image
  வினாத்தாளை பார்த்து ஷாக் ஆன தேர்வர்கள்.. சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடியா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்! தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் சிவில் நீதிபதி பணிக்கான தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ள விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்கள், 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு பணிகளில் உயர் நீதிமன்றம் பங்களித்து வருகிறது. சிவில் நீதிபதி பதவிக்கான 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 1ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டது. இந்த தேர்வை எழுத 12,037 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். முதல் நிலைத் தேர்வு, தமிழகம் முழுவதும் 32 மையங்களில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகின. இதில் 2,544 பேர் அடுத்த கட்ட முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றனர். இதையடுத்து, சென்னையில் உள்ள 25 மையங்களில் முதன்மைத் தேர்வு ...
Image
  ஜனவரி 21-ல் CTET தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.  இரு தாள்கள் கொண்ட இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான சிடெட் தேர்வு ஜனவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.  விருப்பமுள்ளவர்கள் ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக நவம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.