Posts

Showing posts from November 4, 2023
Image
  TET வழக்கு - தமிழக பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் நேரடி தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற 400 பேரை போட்டி தேர்வின்றி நேரடியாக நியமிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது . இதில் , 400 பணியிடங்களை காலியாக வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை நவ . , 10 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது .
Image
  டிஎன்பிஎஸ்சி (TNPSC) போன்ற அரசுத் தேர்வுகளில் ஜெயிக்க இந்த 5 விஷயங்கள் முக்கியம்! ஒவ்வொரு வருடமும் மத்திய மற்றும் மாநில அரசு பல போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்கிறனர். கண்டிப்பாக விடா முயற்சியும், திட்டமிடுதலும் இருந்தால் போட்டித் தேர்வுகளில் உங்களால் வெற்றி பெற முடியும் என்கிறார் தேனி மாவட்டத்தில், ஏழை மாணவர்களுக்காக போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் தமிழாசிரியர் கோ. செந்தில்குமார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்தத் திண்ணை அமைப்பின் மூலம் இதுவரை 150 -க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை செந்தில்குமாரும், அவரின்  குழுவினரும் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சொல்லும் கீழ்காணும் இந்த 5 விஷயங்களை கடைபிடித்தாலே போதும். போட்டித் தேர்வுகளை எளிதில் வெற்றி பெறலாம். போட்டித் தேர்வைப் பற்றிய புரிதல்...! போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கு முன்பு நம்முடைய கல்வி மற்றும் வயது, தகுதி என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 10, +2 படித்தவர்கள் என்னென்ன போட்டி தேர்வுகளில் பங...
Image
  புதுச்சேரி நவோதயா பள்ளி அட்மிஷன்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு புதுச்சேரி ஜவகர் நவோதயா பள்ளி முதல்வர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி, பெரியகாலாப்பட்டில் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் (அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகள்) உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் தெரிவுநிலைத் தேர்வில் அடிப்படையில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்.31 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நவம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  எனவே இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்களின் பெற்றோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Image
  பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இணையதள முகவரி வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடவாரியாக ஒரு மதிப்பெண் வினாக்கள் அடங்கிய வினாத்தொகுப்பு, ஆன்லைனில் உருவாக்கி, இணையதள முகவரியை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடத்திட்ட குழு, பாட கருத்தாளர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் கொண்ட குழு சார்பில், பாடவாரியாக வினாத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தையும் முழுமையாக படித்தால் மட்டுமே, கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். தவறாக பதிலளித்தால், விடை திரையில் தோன்றும் வகையில், இ-வினாத்தாள் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் ஹைடெக் ஆய்வகத்தில் பதிவிறக்கி, பயிற்சி பெற அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில், 198 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்குள்ள கம்ப்யூட்டர் ஆய்வகத்தில், வினாத்தொகுப்பு பதிவிறக்குவதற்கான, இணையதள முகவரி, க்யூ.ஆர்., கோடு ஆகியவை, பள்ளிகளு...
Image
  சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கு ஜன.1 முதல் செய்முறை தேர்வு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10, 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு: செய்முறைத் தேர்வு ஜனவரி 1-ல் தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரை நடைபெறும். மேலும், குளிர்கால பள்ளிகள் செய்முறைத் தேர்வை நவம்பர் 14 முதல் டிசம்பர் 14-ம் தேதிக்குள் நடத்திக் கொள்ளலாம். இந்த பள்ளிகள் தேவைக்கேற்ப ஒருநாளில் 3 சுற்றுகளாக தேர்வை நடத்தலாம். ஆனால், ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 30 பேர் மட்டுமே இருக்க வேண்டும். இதுகுறித்த விவரங்களை www.cbse.gov.in வலை தளத்தில் அறியலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.