
அதிகநாள் லீவ் எடுத்தால் பொதுதேர்வு எழுத முடியாது - பள்ளிக்கல்வித்துறை +2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் பெயர் பட்டியல் தயாரிப்பது குறித்து அரசு தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கல்கடந்தாண்டு EMIS இணையதளத்தில் இருந்து மாணவர்களின் பெயர் பட்டியலை பெற்று தேர்வு எழுது அனுமதி வழங்கியதால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வராதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் 2023-24ஆம் கல்வியாண்டில் +2 வகுப்பு பொதுத் தேர்விற்கான பெயர் பட்டியலில் வருகைப்பதிவேடு கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிப் பண்டிகை முடிந்தப் பின்னர் வெளியிடப்படும் என துறையின் இயக்குனர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், புதுச்சேரி கல்வி இணை இயக்குனர், அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 2023 மார்ச் மாதம் தேர்வு எழ...