Posts

Showing posts from November 1, 2023
Image
  பட்டதாரி ஆசிரியர் பணியிடம்.. விண்ணப்ப பதிவு தொடக்கம்! தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வுக்கு, இன்று முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. www.trb.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ் வழியில் கற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏதேனும் சந்தேகம் இரு...
Image
  ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க செயலி , இணையதளம் தொடக்கம் பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் , ஆசிரியர் இல்லா பணியாளர்களுக்கான குறைதீர் புலம் இணையதளத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 29 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 17 சுருக் கெழுத்து தட்டச்சர் நிலை -3 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளைசர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினார்.  இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக 2 லட்சத்து 29,905 ஆசிரியர்கள் , ஆசிரியர் இல்லாத 29,909 ஆசிரி பணியாளர்களுக்கான பணிப் பலன் சார்ந்த கோரிக்கைகளை இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க ஏதுவாக , ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குறைதீர் புலம் ( Staff Grievance Redressal'Cell Portal and App ) என்ற செயலி மற்றும் இணையதளத்தை அவர் தொடங்கிவைத்தார்.  இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியது :  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர...