
2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு! பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / கல்வியாளர்கள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி மாதம் 7ஆம் தேதி தேர்வு நடைபெறும். இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிப்பைப் டவுன்லோட் செய்து பார்க்கலாம். இந்தப் பணியில் சேர்பவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை வழங்கப்படும். மொத்தம் 2222 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவை துறைவாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்த...