டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்..!! சைலேந்திரபாபுவை நிராகரித்த ஆளுநர்..!! புதிய நபரை தேர்வு செய்யுங்க..!! டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்கள் நியமனம் குறித்த தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்திருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஜூன் 30ஆம் தேதி தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வு பெற்றார். இதையடுத்து, இவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இதை தொடர்ந்து, தலைவராக சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்கள் 8 பேரை புதிதாக நியமித்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையில் மோதல் நீடிக்கும் நிலையில், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நிலுவையில் இருந்தன. டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படி நியமித்து வரும் நிலையில், அரசால் பரிந்துரைக்கப்பட்ட கோப்பினை சமீபத்தில் ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆளுநர் அனுப்பிய கோப்பில், சில சந்தேகங்களை எழுப்பி, அதற்கான விளக்கங்களையும் அவர் கோரியுள்ளதா
Posts
Showing posts from October 23, 2023