ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு அரசாணயில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் உள்ள பள்ளிகளில், ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்சவயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "04.10.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்திருந்தோம். அதன்படி 17 நாள்களிலேயே சொன்னதை செய்து முடித்து தற்போது அரசாணையையும் வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்க...
Posts
Showing posts from October 22, 2023
- Get link
- X
- Other Apps
144 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக விதிமுறைகளும் உருவாக்கப்பட்டது. இந்தநிலையில் முதற்கட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்தார். 144 ஆசிரியர் பணியிடம் இந்தநிலையில் புதுவை பள்ளிக்கல்வித்துறையில் காரைக்கால் மற்றும் மாகியில் காலியாக உள்ள 144 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காரைக்காலில் 124 இடங்களும் (வகுப்பு வாரியாக பொது-52, ஓ.பி.சி.-13, எம்.பி.சி.-22, இ.பி.சி.-2, பி.சி.எம்.-2, பி.டி.-1, எஸ்.சி.-19, எஸ்.டி.-1, இ.டபிள்யு.எஸ்.-12, பி.டபிள்யு.பி.டி.-4), மாகியில் 21 இடங்களும் (...