
TRB - CMRF தகுதித் தேர்வு அறிவிப்பு 2023 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! தமிழ்நாட்டின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி பெல்லோஷிப் உதவித்தொகை (CMRF) தகுதித் தேர்வுக்கு தகுதியான தமிழக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 15.11.2023, மாலை 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TN TRB விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை: கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் – 60 அறிவியல் – 60 என மொத்தம் 120 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். CMRF தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் / தேர்வுக் கட்டணம் / பதிவுக் கட்டணம் கிடையாது என தெரிவிக்கபப்ட்டுள்ளது. CMRF திட்டத்திற்கான தகுதிகள்: தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க...