.png)
NEET UG 2024: நீட் தேர்வு சிலபஸ் குறைப்பு; நீக்கப்பட்ட பகுதிகளின் விவரம் இங்கே தேசிய மருத்துவ ஆணையம் (NMC) கடந்த வாரம் மருத்துவ நுழைவுத் தேர்வான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை ( NEET UG) 2024 பாடத்திட்டத்தை வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும், தேசிய தேர்வு முகமை (NTA) நீட் தேர்வின் பாடத்திட்டத்தை அறிவித்து வந்த நிலையில், இந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணையத்தின் பட்டதாரி மருத்துவக் கல்வி வாரியம் (UGMEB) நீட் தேர்வு பாடத்திட்டத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, சி.பி.எஸ்.இ வாரியம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைத்தது, ஆனால் நீட் பாடத்திட்டம் அப்படியே இருந்தது. மே 2023 இல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, மனுதாரரான டாக்டர் அரவிந்த் கோயல், மாணவர்கள் தங்கள் திருப்புதல்களைத் திட்டமிடும் வகையில் பாடத்திட்டத்தை விரைவாக அறிவிக்க கோரினார் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட NCERT புத்தகங்களின்படி இந்த ஆண்டு நீட் தேர்வின் பாடத்திட்டத்தை மறுவடிவமைக்க வலியுற...