
புதுச்சேரியில் வேலை வாய்ப்பு முகாம்; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! புதுச்சேரி உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சர்வீஸின் சார்பில் 14-10-2023 (சனிக்கிழமை) அன்று புதுச்சேரி கொட்டுபாளையம், நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் உள்ள நகர வாழ்வாதார மையத்தில் சென்னையில் உள்ள சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து புதுச்சேரி உழவர் கரை நகராட்சி உதவி திட்ட அதிகாரி சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இந்த வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியும் 2 மணி வரை சென்னையில் சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு செயல்பாட்டின் வாடிக்கையாளர் சேவை பணிக்காக நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டம் தேர்ச்சி / தேர்ச்சி பெறாத நன்கு ஆங்கிலம் பேச தெரிந்த இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதில் தேர்வு செய்யப்படும் அனைவருக்கும் மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்ப...