![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8Pn2prCGuwbMTgNH7AaUniBW3EuTzKVtDxHftaJx9AEhYylkYVBaLiL4NkYD-g7JWfQJVwVdY26KPRb5H-t46zaOmmWzM6E9KhvJQVQV0YY_-vq-sGJSeva-ZwaBYmcGM6rb0GPEZR3I1Ixu4llw9a5OHVOvlD7sn0z4XFZcYAaRp7a6fRlGdjvrttsc/s320/th-1_0.jpg)
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் மாற்றமா? தேர்தலால் தள்ளிப்போகுதா? அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்படும் என்று தகவல் இணையத்தில் பரவியது. இருப்பினும், மக்களவைத் தேர்தல் மே மாதமே நடத்தப்பட்டால், பொதுத் தேர்வு தேதியில் மாற்றமிருக்காது என்றும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்டன. 18வது மக்களவைத் தேர்தல் 2024ம் வருடம் எந்த தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.