ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில்அக்.13-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம் .சுமாா் 20 ஆயிரம் ஆசிரியா் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தமிழகத்தின் 11 ஆசிரியா் அமைப்புகள் இணைந்த கூட்டமைப்பு சாா்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் அக்.13 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச்செயலா் ச.மயில் தெரிவித்தாா். கோவில்பட்டியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தோதல் அறிக்கையில் ஆசிரியா்களுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. தொடக்கக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும் திட்டத்தால் மாணவா்களுக்கு எந்தவித பயனும் இல்லை. ஆகவே அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எமிஸ் இணையதளத்தில் புள்ளிவிவரங்கள் பதிவேற்றம் செய்வதிலேயே பெரும்பாலான நேரம் செலவிடப்படுவதால், அந்த பதிவேற்றத்திலிருந்து ஆசிரியா்களை முழுமையாக விடுவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை சுமாா் 20 ஆயிரம் ஆசிரியா் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த காலியிடங்களை விரைவில் பூா்த்தி செய்ய வேண்டும். தமிழக அரசின் காலை உணவுத் திட
Posts
Showing posts from October 8, 2023