
அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை: போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மூவர் குழு நியமிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் அறிவித்த நிலையில், அதில் திருப்தி இல்லை என்பதால், போராட்டம் தொடரும் என பகுதிநேர ஆசிரியர் சங்கமும் டெட் ஆசிரியர் சங்கமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. சென்னை நுங்கம்பாக்கம், டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெட் ஆசிரியர்கள் சங்கம் கூறுவது என்ன? ’2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு உடனட...