
அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி.. போராட்டம் தொடரும்! TET ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி என TET ஆசிரியர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. TET ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டி 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் இன்று மதியம் ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. அமைச்சருடன் மேலும் 2 சங்கங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. முதலில் நடந்த அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் இதனால் போராட்டம் தொடரும் எனவும் TET ஆசிரியர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. 2013ல் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்க கோரியும், சம ஊதியம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்...