ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலம் டிரைவர், கண்டக்டர் தேர்வுக்கு டெண்டர் வெளியீடு: மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் 3,454 பேருந்துகளை 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் இயக்கி வருகிறது. இதில் 1,559 சாதாரண கட்டணம் பேருந்துகள், 1,674 விரைவு மற்றும் சொகுசு பஸ்கள், 48 குளிர்சாதன பஸ்கள், 207 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன், வாயிலாக தினமும் 28.70 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்கள் காரணமாக சில பஸ்கள் நிறுத்தப் பட்டது. இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் என 234 பேரை ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 32 பணிமனைகளில் உள்ள 117 டிரைவர்கள், 117 கண்டக்டர்கள் என மொத்தம் 234 காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்.31ம் தேதி மதியம் 2.30 மணிக்குள் டெண்டர் கோருவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அன்று மாலை 3 மணிக்கு டெண்டர் திறக்கப்படும். ...
Posts
Showing posts from October 1, 2023
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சியில் உரிய மதிப்பெண் இருந்தும் நிராகரித்தது ஏன்? - நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி கருத்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் உரிய மதிப்பெண் எடுத்தும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், நிகழந்த தவறை எப்படி சரி செய்வது?என்பது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து, திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தேர்வு தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து, தவறான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் இன்று (செப்.30) விசாரணைக்கு வ...
- Get link
- X
- Other Apps
சம வேலைக்கு சம ஊதியம்; போராட்டக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை! சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லாஉஷா பேச்சுவார்த்தையில்இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தொடர்ந்து 4வது நாளாக கொளுத்தும் வெயிலிலும் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா இன்று (அக்.1) பேச்சுவார்த்தை நடத்துகிறார். வெயிலின் கொடுமை தாங்காமல் வயது முதிர்வு காரணமாக 230க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 13 பேர் போராட்டக் களத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதி 311-ஐ நிறைவேற்ற வேண்டும் என்பதே இவர்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது. 2023 ஜனவரி 9ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாட்டைக் களைவதற்கான குழுவை அமைத்து, அதன் அடிப்படையில், அறிக்கையைப் பெற்று மூன்று மாதத்தில் ஊதிய முரண்பாடு களையப்படும்...
- Get link
- X
- Other Apps
சரத்குமார் வலியுறுத்தல் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு தேவை சமக தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு ஆசிரியர்கள் சங்க தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட 50 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தது வருத்தமளிக்கிறது. ஊதிய முரண்பாட்டால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதித்துள்ளனர்.எனவே, அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்தி, உண்ணாவிரதத்தை கைவிடச் செய்து, நிரந்தர தீர்வு காண கேட்டுக் கொள்கிறேன்.
- Get link
- X
- Other Apps
பாட்டு பாடி போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள்; பேச்சுவார்த்தைக்குப் பிறகும் போராட்டம் தொடர்வதாக அறிவிப்பு! பணி நிரந்தரம் செய்ய கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், ஆசிரியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற 8 பிரிவுகளில் சுமார் 12 ஆயிரம் பேர் 2012ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். ஆனால், அவர்களுக்கு தொகுப்பூதியத்தில் மட்டும் உயர்வு வழங்கப்பட்டது. பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை: இந்த நிலையில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 25ஆம் தேதி முதல் துவக்கி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள், "12 கல்வியாண்டுகளாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மே...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்கள் போராட்டம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன் ஆசிரியர் அமைப்புகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலக வளாகத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வரும் மூன்று வகையான ஆசிரியர் அமைப்புகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பள்ளிக் கல்வித் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. திமுக தேர்தல் வாக்குறுதியான 177 -ன்படி மறுநியமனப் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், வாக்குறுதி 181-ன் படி, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்களும், வாக்குறுதி 311ல் கூறியிருப்பது போல சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடு...