CTET Result 2023: சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு; பார்ப்பது எப்படி? சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு முடிவுகள் இன்று ( செப்.25) வெளியாகி உள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள தேர்வு முடிவைப் பார்ப்பது எப்படி என்று காணலாம். அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (CENTRAL TEACHER ELIGIBILITY TEST - CTET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். அதேபோல மத்திய அரசுப் பணிகளுக்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பேனா - காகித முறையில் நடைபெறும் தேர்வை சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது. 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு நேரடி முறையில் ஆகஸ்ட் 2
Posts
Showing posts from September 25, 2023