தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெற்று முடிந்த தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் வரும் 27ம் தேதி பிற்பகல் மூன்று மணி அளவில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் விடைத்தாள்களை மறுகூட்டல் செய்யவும், ஒளி நகல் பெறவும் விண்ணப்பிக்க விரும்பினால் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையையும் சேர்த்து அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்...
Posts
Showing posts from September 24, 2023
- Get link
- X
- Other Apps
செப்.25 முதல், அரசு கல்லூரிகளில் எம்எட் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு எம் எட் (M.Ed.) சேர்வதற்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு எம்.எட்., (Master of Education - M.Ed.) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023 - 2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.60 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விபரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்...