NEET-PG தேர்வில் '0' மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ படிப்பு சேரலாம்! இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு! அனைத்து விதமான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக 3ம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளில் உள்ள காலியிடங்களை முழுமையாக நிரப்பும் வகையில் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Posts
Showing posts from September 20, 2023
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் உதவித்தொகை தகுதித்தேர்வு!!! முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்துக்கு ரூ.12 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரத்தை ஒதுக்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை:கல்லூரிக் கல்வி இயக்குனர் கலை, மனிதவளம் மற்றும் சமூக கல்வியில் படிக்கும் 100 மாணவர்களுக்கும், அறிவியல் பிரிவில் 100 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் வழங்க கேட்டிருந்தார். அதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை கலை, மனிதவளம் மற்றூம் சமூக கல்வியில் ஆராய்ச்சி படிப்பை படிக்கும் 60 மாணவர்களுக்கும், அறிவியல் பிரிவுகளில் படிக்கும் 60 மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் 25 ஆயிரம் வீதம் வழங்கப்படும். மேலும் ஆராய்ச்சி தற்காலிக உதவித்தொகையாக 3 ஆண்டுகளுக்கு கலை, மனிதவளம் மற்றூம் சமூக கல்வியில் ஆராய்ச்சி படிப்பை படிக்கும் 60 மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதமும், அறிவியல் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாத...