5000 காலி பணியிடங்கள் நிரப்புதல். புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!! புதுச்சேரி மாநிலத்தில் அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட நேரடி ஆட்சேர்ப்பு பணியை அரசு தொடங்கியுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் நிரப்பப்பட உள்ள காலி பணியிடங்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட உள்ளது. நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பல்வேறு நிர்வாக பிரிவுகளில் சுமார் 5,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஏழு வருடங்களாக நிதி நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த வருடம் 1050 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 600 பணியிடங்களை அரசு நிரப்பியது. இதனை தொடர்ந்து மீதமுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posts
Showing posts from September 12, 2023
- Get link
- X
- Other Apps
வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை அரசு வெளியிட்டது! தமிழகம் முழுவதும் 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனடிப்படையில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16 லட்சத்து 80 ஆயிரத்து 160 பேரும், அதேபோல் 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களை ...