Posts

Showing posts from September 7, 2023
Image
  10 லட்சம் காலியிடங்கள்! தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் குறித்த தகவல்கள் &'நேஷனல் கரியர் சர்வீஸ்' இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ளன என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில், நேரடி காலியிடங்களின் எண்ணிக்கை 5.6 லட்சமாகவும், ஜூன் மாதத்தில் 7.6 லட்சமாகவும் இருந்த நிலையில், தற்போது 10 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. காலியிடங்களில், மூன்றில் ஒரு பங்கு இடங்களில் அனுபவம் இல்லாதவர்களை தேர்ந்தெடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இது பல இளம் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற உதவுகிறது.  தொழில்நுட்ப நிர்வாகிகள், விற்பனை பிரதிநிதிகள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், லாஜிஸ்ட்டிக்ஸ் பிரதிநிதிகள், சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ் மற்றும் பராமரிப்பு பொறியாளர் ஆகிய பணியிடங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Image
  குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் !! டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி ஆகஸ்ட் மாதம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாதம் முடிந்தும் செப்டம்பர் மாதம் வந்தும் குரூப்-1 தேர்வுக்கான எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாவில்லை. லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் குருப்-1 தேர்வு குறித்து அறிவிக்காமல் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்? என தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி ஆணையம் நிரந்தர தலைவர் இல்லாமலும் உரிய உறுப்பினர்கள் இல்லாமலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் ஓய்வு பெற்ற தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அவர்கள் டிஎன்பிஎஸ்சி ஆணையத்திற்கு தலைவராக வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பரிந்துரை ஆவணங்களையும் ஆளுநரிடம் அனுப்பி வைத்து. ஆனால் ஆளுநர் ரவி அவர்கள் சைலேந்திரபாபு அவர்களை டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்க முடியாது என்றும் இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஆனால் தமிழக அரசு சைலேந்திரபாபு அவர்களை டிஎன்பிஎஸ்சி ஆணையத்...