
TN TRB BEO: வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வுகளை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஜனவரி மாதம் வெளியிடப்படும்; வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. மேலும் 6,553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும். பட்டதாரி ஆசிரியர்கள் 3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஏப்ரல் மாதமும், பா...