.jpg)
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரவு காவலா் பணி விண்ணப்பிக்க அழைப்பு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இரவுக் காவலா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாகவுள்ள இரவுக் காவலா் பணியிடத்தை நிரப்புவதற்காக தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பொதுப் போட்டி- முன்னுரிமையற்றவா் பிரிவு இனசுழற்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், அருந்ததியினா் சமுதாயத்தைச் சோந்தவா்களுக்கு 01.01.2023 அன்றைய நிலையில் 18 வயதிலிருந்து 37 வயது மிகாமலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்) பிரிவைச் சோந்தவா்களுக்கு 18 முதல் 34 வயதுக்கு மிகாமலும், இதர பிரிவினருக்கு 18 முதல் 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பில் 10 ஆண்ட...