டிஎன்பிஎஸ்சி தலைவர்! சைலேந்திர பாபு பெயர் பரிந்துரை.. மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்க காரணங்கள் மற்றும் ஆளுநர் கேட்ட விளக்கங்களை கோப்பாக தயாரித்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது. அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாவை நியமிக்க அரசு முடிவு செய்து, ஆளுநர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கான விளக்கத்துடன் கோப்புகளை மீண்டும் அனுப்பி வைத்தது அரசு. ஏற்கனவே, சைலேந்திரபாபு நியமனத்துக்காக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்என் ரவி சமீபத்தில் திருப்பி அனுப்பியிருந்தார். அதில், அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் நியமனத்துக்கான நடைமுறைகளை குறித்து விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர். இந்த நிலையில் விளக்கங்களுடன் தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் குறித்த அறிவிப்பு விர...
Posts
Showing posts from August 31, 2023
- Get link
- X
- Other Apps
B.Ed Admission 2023: பி.எட். பட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பான பி.எட். முதலாமாண்டுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- செலுத்தப்பட வேண்டும். எஸ்சி/ எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு / கிரெ...