ஒரு மாதத்திற்குள் எஸ்.ஐ தேர்வு முடிவுகள்! ஒரு மாதத்திற்குள் எஸ். ஐ. எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்களுக்கு கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வு நடைபெற்றது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 621 உதவி காவல் ஆய்வாளா் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் தகுதியானவா்களை தேர்வு செய்யும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியம் சாா்பில் சில மாதங்களுக்கு முன்பு தோவு அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக எழுத்து தேர்வு, மாநிலம் முழுவதும் 45 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னையில் இத் தோவு 6 மையங்களில் நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற எஸ்.ஐ. தேர்வை 1.51 லட்சம் போ எழுதினர். காவல்துறை சாா்ந்த விண்ணப்பதாரா்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (ஆக.27) பிரதான எழுத்து தேர்வு நடைபெற்றது.
Posts
Showing posts from August 28, 2023
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பி.ஜி டி.ஆர்.பி தேர்வு; எவ்வளவு காலியிடங்கள் வரும்? தேர்வுக்கு தயாராவது எப்படி? தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் PG TRB எனப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை அடுத்த ஆண்டு நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு 2000க்கும் அதிகமான காலியிடங்களுக்கு நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, இதில் 100 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இரண்டாம் தாள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு, உளவியல் மற்றும் பொது அறிவு பகுதியிலிருந்து 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தேர்வுக்கு தயாராவது எப்படி? தமிழ் மொழித் தகுதித் தேர்வை பொறுத்தவரை, 6- 10 வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ள வேண்டும். முந்தைய ஆண்டு வினாக்கள் அல்லது இதுவரை அரசுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அடிப்படையில் தயாராகிக் கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் நீங்கள் ஏற்கனவே திறமையானவராக இருந்தாலும், போட்டித் தேர்வு கண்ணோட்டத்தில் நன்றாக படித்துக் கொள்வது அவசியம். பாடங