வசூல் ராஜா திரைப்பட பாணியில் எஸ்.ஐ தேர்வில் முறைகேடு.. சிக்கிய பாசமலர்கள்... வசூல் ராஜா MBBS திரைப்பட பாணியில் எஸ்.ஐ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்ற இளைஞரிடமும், அவருக்கு உதவிய அவரின் தங்கையிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று (ஆக. 26) எஸ்ஐ பணிக்கு தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட மையத்தில் 3, 559 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், அந்த தேர்வு மையத்தில் உள்ள ஒரு அறையில், தேர்வர் ஒருவர் ஏதோ பேசிக்கொண்டே தேர்வு எழுதுவதாகவும், இதனால் தங்களுக்கு இடையூறாக உள்ளதாகவும், அங்கு தேர்வெழுதியவர்கள் தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், இளைஞரிடம் விசாரித்தபோது, ரஜினியின் எந்திரன் திரைப்படத்தில், மருத்துவ தேர்வு எழுதும் ஐஸ்வர்யா ராய்க்கு, ரோபோவான சிட்டி ப்ளூ டூத் ட்ரான்ஸ்மிட்டர் மூலம் விடைகளை சொல்வது போல இந்த இளைஞரும் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. வசமாக சிக்கிய அண்ணன் - தங்கை முறைகேட்டில் ஈடுபட்ட ஊத்தங்கரை அருகே அச்சூரை சேர்ந்த நவீன், முகக்கவசம் அணிந...
Posts
Showing posts from August 27, 2023
- Get link
- X
- Other Apps
தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது..! தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. இந்த நாளில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்பவரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்க ...
- Get link
- X
- Other Apps
காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது? பள்ளி கல்வித்துறை லேட்டஸ்ட் அப்டேட் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நாட்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படுகின்றன. செப்டம்பர் 27-ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
விரைவில் 62,000 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம்.. இதுவே முதல் முறை.. அசத்தும் மத்திய பிரதேச மாநில அரசு.!! மத்திய பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டின் இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கட்சிகளும் மக்களுக்காக வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 87 ஆயிரத்து 630 நிரந்திர ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக கடந்த வருடம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையையில் தெரிவிக்கப்பட்டது. 6 ஆயிரம் பள்ளிகளில் ஒரு நிரந்தர ஆசிரியர் கூட இல்லை என்றும் 21,000 பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் ஒருவர் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பிரதேச மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் ஆசிரியர் நியமனம் குறித்து முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளார். இதன் மூலமாக 62 ஆயிரம் ஆசிரியர்களை பணியமர்த்துவத்தில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் இருக்கும் என்று க...
- Get link
- X
- Other Apps
டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி: விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவு பத்து ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு, ஆசிரியர் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்க கோரிய வழக்கில், அரசு தரப்பு விரிவான பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சிபட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தாக்கல் செய்த மனு: கடந்த, 2014க்கு பின், ஆசிரியர்கள் பணிக்கு நேரடி தேர்வு நடத்தப்படவில்லை. முதுநிலை பட்டம் மற்றும் எம்.எட்., படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, நான் தகுதி பெற்றுள்ளேன். 2013ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜனவரியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். என்னுடன், 16,910 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. அதன்பின், தேர்ச்சி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தளர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக, அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களில், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சான்றிதழ் சரிபார்ப்பு முடித்ததால், எனக்கு பணி நி...