Posts

Showing posts from August 26, 2023
Image
  தமிழ்நாடு இ-சேவை மையத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு தமிழ்நாடு இ சேவை மையத்தில் காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தற்காலிக/ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட மின் மேலாளர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் : 8 பணியின் தன்மை : மாவட்ட மின் மேலாளர் கல்வித் தகுதி : பி. இ., பி.டெக் வயது வரம்பு : 21-35 தேர்வு கட்டணம்: ரூ.250 கடைசித் தேதி: 11.9.2023 விண்ணப்பிக்க: https://tnega.tn.gov.in/careers
Image
  மாநில கல்வி கொள்கை தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கியது: குழு உறுப்பினர் ஒப்புதலுக்கும் ஏற்பாடு மாநிலக் கல்விக் கொள்கை தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குழுவினரின் ஒப்புதல் பெறுவதற்காக 30ம் தேதி கூட்டம் நடக்க இருக்கிறது.  கடந்த 2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கல்வித்துறைக்காக மாநில கல்விக் கொள்கை உருவாக்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  அந்த குழு மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், பொதுமக்கள் என பலதரப்பிலும் கருத்து கேட்டுப்பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக 13 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்களும் கல்வி தொடர்பான பிரச்னைகளுக்கு அந்தந்த துறைகளுடன் தொடர்பு கொண்டு தீர்வுக்கான வழிகளை ஆய்வு செய்து வருகிறது.  மேலும், தமிழ்நாட்டில் வெவ்வேறு வகையான 50 பள்ளிகள், 15 கல்லூரிகள், 5 பல்கலைக் கழகங்களை தேர்வு செய்து அவை எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் அதை தீர்ப்பதற்கான வழிகளையும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறது.  இவற்றுடன் சேர்