
37 கல்லூரிகளில் ஒரு இடம் கூட பூர்த்தியாகவில்லை: காலாவதியாகும் இன்ஜினியர் படிப்பு! தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகப்பெரும் அளவில் குறைந்து வருகிறது. குறிப்பாக 37 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பு என்பது ஒரு காலத்தில் மாணவர்களின் கனவு படிப்பாக இருந்தது. மேலும் பெற்றோர்களும் இன்ஜினியர் படிப்பை பெரிதும் விரும்பியதால் அதிக அளவிலான மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு இன்ஜினியரிங் கல்லூரிகளை நோக்கி ஓடினர். இதனால் அந்த நேரங்களில் தமிழ்நாடு முழுவதும் பல இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதனால் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனால் அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாணவர்கள் ஒரே காலகட்டத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்து வெளிவந்தனர். இதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஜினியரிங் படிப்பை நோக்கி செல்லக்கூடிய மாணவர்களினுடைய எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்ட...