Posts

Showing posts from August 22, 2023
Image
 டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி காலி ; தேர்வில் அடிக்கடி குளறுபடிகள் - தினகரன் கோரிக்கை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் திருப்பி அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் எந்த அடிப்படையில் இறுதி செய்யப்பட்டனர்? உறுப்பினர்கள் தேர்வில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறைப்படி பின்பற்றப்பட்டதா? போன்ற கேள்விகளை ஆளுநர் எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது திமுக ஆட்சியமைந்த பிறகு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி காலியிடமாக இருப்பதால் அந்த ஆணையம் நடத்தும் தேர்வில் அடிக்கடி குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வேலைவாய்ப்புக்கான தே
Image
  கூடுதல் பணியால் கற்பித்தல் பணி பாதிப்பு:அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்பல் கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 'எமிஸ்' இணையதளத்தில் கூடுதல் விவரங்களை ஆசிரியர்கள் தினசரி பதிவேற்றம் செய்வதால் கற்றல் திறன் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளது. மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,711 ஆகும்.தற்போதைய கல்விச் சூழலில், கற்பித்தல் பணி மட்டுமல்லாமல், பல்வேறு கூடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாணவர்களின் வருகை பதிவேடு, அறிவியல் மன்றங்களின் செயல்பாடுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித் தொகை சார்ந்த பணிகளை பள்ளி மேலாண்மை தகவல் அமைப்பு எனும் 'எமிஸ்' இணையதளத்தில் தினசரி பதிவேற்றம் செய்கின்றனர்.இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது மட்டுமின்றி மாணவர்களுக்கான கற்றல் திறனும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'கடந்த கல்வியாண்டுகளி
Image
  ஆசிரியர் பதவிக்கு 50,000 இளைஞர்கள் பணி நியமனம். பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு.!!! இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கொரோனா காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தமிழகத்திலும் அரசு பள்ளிகளில் தற்போது வரை போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் தவிர்த்து வருகின்றனர்.  இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் நலனை கருதி ஆசிரியர் பதவிக்கு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி தனது வாழ்த்தை தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் கூடிய விரைவில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Image
  பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வுகோரி தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர், மதுரை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்துவதற்காக கணினி, உடற்கல்வி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில், 13 ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மாதம் ரூ.10,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, இவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து மாதம், ரூ.28,000 ஊதியம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாததை கண்டித்து, பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர், நேற்று மதுரை கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அப்போது, அ