
11 ஆம் வகுப்பில் கணிதத்தை கைவிடுவது எதிர்காலத்தை பாதிக்குமா? மாணவர்கள் சிலருக்கு கணக்குப் பாடம் என்பது மிகவும் எளிது. அந்தப் பாடத்தை பயில மிகவும் ஆர்வம் காட்டுவர். ஆனால் வேறு சில மாணவர்களுக்கோ கணிதப் பாடம் என்றால் பயம். ஒரு மிரட்சி. கணக்குப் பாடம் என்றாலே அவர்களுக்கு எட்டிக்காயாக கசக்கும். எனவே, 10-ஆம் வகுப்பில் இருந்து 11-ஆம் வகுப்புக்கு செல்லும் லட்சக்கணக்கான மாணவர்கள், கணிதத்தை தங்களது பாடப் பட்டியலில் வைக்க வேண்டுமா அல்லது முற்றிலுமாக கைவிட்டு விடலாமா என்ற குழப்பத்திலேயே செல்கின்றனர். கணிதத்தை அதிகம் விரும்பாத மாணவர்களில் நீங்கள் இருந்தால், கணிதத்தை விட்டு வெளியேறுவது உங்கள் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்குமா என்று யோசித்தால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். கணிதம் எப்போது, எங்கு தேவைப்படுகிறது, நீங்கள் கணிதத்தை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள இதைத் தொடர்ந்து படிக்கலாம். கணிதம் எவ்வளவு முக்கியமான பாடம் என்பதை இதன்மூலம் உங்களுக்கு புரிய வைக்க முடியும். 1. ஏன் கணிதம் அவசியமாகிற...