தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 66.55 லட்சம் பேர்..! தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர்.3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள். ஆண்களின் எண்ணிக்கை 30,94,630 பெண்கள் எண்ணிக்கை 35,60,846 மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 290 மொத்தம் 66,55 ,766 அதில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16,87,537 பேர் உள்ளனர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28,53,916 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18,51,474 பேர்.46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2,56,068 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்...
Posts
Showing posts from August 19, 2023
- Get link
- X
- Other Apps
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு பொதுப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுற்றுலா அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. TNPSC சுற்றுலா அதிகாரி 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுற்றுலா அதிகாரி பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. 09.09.2017 FN, 09.09.2017 AN and 10.09.2017 ஆகிய தேதிகளில் இப்பணிக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 11/07/2018 , 11/12/2019 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. வாய்மொழித்தேர்வுக்கான பட்டியல் 17/10/2018 வெளியிடப்பட்டு, 02/11/2018 அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான இறுதி முடிவுகள் 09/11/2018 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், வாய்மொழித் தேர்வில் சேருவதற்குத் தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஆகஸ்ட் 18ம் தேதியான இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் விவரங்களை உள்ளிட்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.