Posts

Showing posts from August 18, 2023
Image
  ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.  இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் நிகழ்நிலையில் (online) விண்ணப்பிக்கலாம். இன்று மதியம் 01.00 மணி முதல் வருகிற 18.09.2023 மதியம் 01.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு. ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு (Practical) மற்றும் நேர்காண...
Image
  இன்று (ஆக.18) CTET ஹால் டிக்கெட். தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.!!! மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (CTET) ஹால் டிக்கெட்டுகள் இன்று ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பத்தாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதனைத் தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. முதல் ஷிப்ட் காலை 9:30 முதல் மதியம் ஒரு மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 2:30 முதல் 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது.