ஆசிரியர் பணி நியமனம் தாமதம்: எந்த தேர்வு என அரசு குழப்பம் அரசு பள்ளிகளில், 14,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், உரிய கொள்கை முடிவு எடுக்காததால், பணி நியமனம் தாமதமாகிறது. தமிழக அரசு பள்ளிகளில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பதவியில், 4,989; 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் பதவியில், 5,154 மற்றும் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 3,876 முதுநிலை ஆசிரியர் என, 14,019 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில், ஒரு பகுதியை மட்டும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆண்டு தேர்வு திட்ட அறிக்கை, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இதன்படி, 10,000 இடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, மே, ஜூன் மற்றும் நவம்பர் உள்ளிட்ட மாதங்களில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டது.ஆனால், தேர்வுகளை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகள் குழுவினர், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்...
Posts
Showing posts from August 17, 2023